Thirukural

Tuesday, 4 October 2011

Jokku''ba ...

சமீபத்தில் ரசித்த நகைச்சுவை
வார்த்தை சிறிது மாறினால் அனைத்தும் மாறிவிடும்...
------------------------------------------------------------------------------------------------
ஒரு வயசு பையன் தூரத்துல இருந்த தன்னோட சொந்தகாரங்க வீட்டுக்கு கெளம்பினான். ராத்திரி ரொம்ப நேரமானதாலயும் வழியில திருட்டு பயம் இருந்ததாலயும் எதாவது வீட்டுல எடம் கெடைக்குமான்னு பார்த்தான்.

மொதல் வீட்டுல போய் "ஐயா, இன்னைக்கு ராத்திரி உங்க வீட்டுல தூங்கலாமா"..
"அதெல்லாம் முடியாதுப்பா, வீட்டுல வயசு பொண்ணு இருக்கா"..

அடுத்த வீட்டுக்கு போய் அதே கேள்வியை கேட்டான் "இன்னைக்கு உங்க வீட்டுல படுத்தக்கலாமா?"
அதே பதில் "அதெல்லாம் முடியாதுப்பா, வீட்டுல வயசு பொண்ணு இருக்கா"..

வெறுத்து போய் அடுத்த வீட்ல போய் கேட்டான்
"சார்,சார்...."..
"என்னப்பா வேணும்" வீட்டுக்குள்ள இருந்து ஒரு குரல் கேட்டது.
"உங்க வீட்டுல வயசு பொண்ணு இருக்கா?"..
"ஏம்ப்பா?.." வீட்டுக்குரல்..
"இன்னைக்கு உங்க வீட்டுல படுக்கனும், அதனால தான்.."
"!!!!!"
-----------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

Ratings and Recommendations by outbrain